மணிப்பூரில் ராகுலின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: காங். கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து வரும் 14ம் தேதி தொடங்கும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 6,713 கி.மீ. தூரம் பயணித்து மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 66 நாட்களில் 110 மாவட்டங்களில் உள்ள 100 மக்களவை மற்றும் 337 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மக்களை ராகுல் சந்திக்க உள்ளார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘’வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து நீதி யாத்திரை தொடங்கப்பட உள்ளது. இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் ஒன்றிய அரசின் வேலையா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

The post மணிப்பூரில் ராகுலின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: காங். கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: