ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு: 292 பேர் ஆப்சென்ட்

தேனி, ஜன. 7: தேனியில் நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில், 292 பேர் தேர்வு எழுத வரவில்லை.தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் மூலமாக, நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர், மின் பரிசோதகர் உள்ளிட்ட 369 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இப்பணிக்காக மாநிலம் முழுவதும் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேனி மாவட்டத்தில் இத்தேர்வுக்கான மையம் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 832 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதன்படி காலை மற்றும் மதியம் நடந்த எழுத்துத் தேர்வில் 545 பேர் பங்கேற்றனர். 292 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடந்த மையத்திற்கு கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வினையொட்டி தேர்வு நடந்த கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு: 292 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: