கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளியில் மரம் நடுவிழா

ஊட்டி, ஜன. 7: கோத்தகிரி அரிமா சங்கத்தின் சார்பில் கிரீன்வேலி மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா நடந்தது. விழாவில், தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். கோவை மண்டல கவர்னர் ஜெயசேகர், போஜராஜன் மற்றும் பள்ளியின் தாளாளரும் பிரசாத்கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர். லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் கே.ஜே.ராஜூ, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கண்ணன் ராமையா, ஹெரிடேஜ் அறக்கட்டளை யின் செயலர் சதீஷ், கனகராஜ், நந்தகுமார், ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் வாழ்த்தினர்.

விழாவில், இந்த அழகிய பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பன போன்ற பல செய்திகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் 250 சோலை மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக பள்ளியின் முதல்வர் கங்காதரன் அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்க செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

The post கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளியில் மரம் நடுவிழா appeared first on Dinakaran.

Related Stories: