காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ.. மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவத்தால் சர்ச்சையை கிளப்பிய சுனில் காம்ப்ளே!!

மும்பை: காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனேவின் துணை முதல்வரும் பாதுகாவலருமான அஜித் பவார், மருத்துவ கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் எம்.பி.யுமான சுனில் தட்கரே, காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே ஏற்கனவே பெண் ஊழியரை துன்புறுத்தி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ.. மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவத்தால் சர்ச்சையை கிளப்பிய சுனில் காம்ப்ளே!! appeared first on Dinakaran.

Related Stories: