வாணியக்குடியில் மீன் பிடித்துறைமுகம் ஒன்றிய குழுவினர் ஆய்வு

குளச்சல், ஜன.6 : குளச்சல் அருகே வாணியக்குடியில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் வகையில் துறைமுகம் அமையுமிடத்தை ஒன்றியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீன் பிடித்துறைமுகதிற்கான இணை இயக்குனர் (டெல்லி)சங்கர் லட்மண், சென்னை ஐ.ஐ.டி. உறுப்பினர்கள், இண்டோமர் ஆய்வு நிறுவனத்தினர், நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், குமரி மாவட்ட துறை முகங்களுக்கான செயற்பொறியாளர் சிதம்பரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஒன்றியக்குழுவினர் மீனவர்களிடம் கலந்துரையாடினர். இதில் பங்குத்தந்தை ஆனந்த், ஊர் தலைவர் அமலன் ஆகியோர் வாணியக்குடியில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான அவசியம், அரசுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் மீனவர்கள் பெறவிருக்கும் நன்மை குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இண்டோமேர் ஆய்வு நிறுவன உறுப்பினர் மீன்பிடித் துறைமுகத்திற்கு செய்யப்பட்ட ஆய்வு குறித்தும், துறைமுகத்திற்கான அமைப்பு குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர். கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஊர் செயலர் ஜிம்சன், பொருளாளர் ஜெயசீலன் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர். அருள்பணியாளர் அஸ்வின் நன்றி கூறினார்.

The post வாணியக்குடியில் மீன் பிடித்துறைமுகம் ஒன்றிய குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: