மறவபட்டி புனித அடைக்கல மாதா, புனித சந்தியாகப்பர் திருத்தலத்திற்கு 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் வருகை

திண்டுக்கல், ஜன. 6: திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அடுத்த மறவ பட்டியில் புனித அடைக்கல மாதா ஆலயம் மற்றும் புனித சந்தியாகப்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக உயிர்த்த ஆண்டவர் கெபி கட்டப்பட்டது. இந்த கெபியில் வைப்பதற்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து இயேசுவின் 12 சீடர்கள் உள்ளிட்ட 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் கொண்டுவரப்பட்டன.

திருப்பண்டங்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள செயின்ட் குளோட் மறை மாவட்ட ஆயர் ஜான் லூக் கரான் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட குருக்கள் பவனியாக எடுத்து வந்தனர். இதன் பின்னர் உயிர்த்த ஆண்டவர் கெபியில் பக்தர்கள் வழிபடுவதற்காக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் செயின்ட் குளோட் மறை மாவட்ட ஆயர் ஜான் லூக் கரான் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மறை மாவட்ட குருக்கள் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் புனிதர்களின் திருப்பண்டங்களை வணங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை மறவபட்டி பங்குத்தந்தை ராபர்ட் தலைமையில் நிர்மலா சபை அருட்கன்னியர்கள் ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

The post மறவபட்டி புனித அடைக்கல மாதா, புனித சந்தியாகப்பர் திருத்தலத்திற்கு 20 புனிதர்களின் திருப்பண்டங்கள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: