நீலகிரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு

பந்தலூர் : பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக- கேரள எல்லைப்பகுதியான தாளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு நேற்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் இருந்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகள் என 19 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு பேசுகையில்:

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகிறேன் அதற்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பிளஸ்-2 வகுப்பில் நன்றாக படித்து அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேச்சி பெறவேண்டும். அதற்கான ஆயத்தப்பணிகளை மாணவர்கள் இப்போது இருந்தே செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் புரிந்து படித்தால் சாதிக்கலாம் ,உணவு பழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் மாணவர்கள் படிக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவர் நந்தகுமார் மற்றும் பாரதியார் பல்கலை க்கழகத்தின் செனட் உறுப்பினரும் நீலகிரி கல்லூரியின் நிர்வாக இயக்குனருமான ராஷித் கஷாலி ஆகியோர் பேசும்போது மாணவர்கள் பாடங்களை விரும்பி படிக்கவேண்டும் புரிதல்,விடாமுயற்சியுடன் சாதிக்க வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி டீன் மோகன்பாபு,மற்றும் பேராசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: