மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் காட்டன் பேப் கைத்தறி கண்காட்சி

மதுரை, ஜன. 5: மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் காட்டன் பேப் கைத்தறி கண்காட்சி நடந்து வருகிறது. வரும் ஜன.17ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி துவங்கி இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது. இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர் ஜாவித் கூறுகையில், ‘மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் நடந்து வரும் கண்காட்சியில் இயற்கை முறையில் வளர்க்கப்படும் டஸ்ஸர், மூகா வகை பட்டுப்புழுக்களில் இருந்து பட்டாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொணடு வரப்பட்டுள்ளன. கைத்தறி அமைப்பினர், நெசவளர்கள், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இடைத்தரகர்களின்றி நெசவாளர்களின் தயாரிப்புகளை விற்பதுதான் கண்காட்சியின் நோக்கமாகும். ஆரணி, காஞ்சிபுரம், தர்மாவரம், மங்களகிரி, போச்சம்பள்ளி பட்டு சேலைகள், கிரேப், ஜார்ஜெட் சில்க் சேலைகள், ஷிபான் சில்க் சேலைகள், ஜூட் சிலக், தாக்கா சில்க் சேலைகள், கைத்தறி சில்க் காட்டன் சேலைகள், சில்க் பிளெண்ட் சேலைகள் மேலாடைகள், ஷால்கள் என நாடு முழுவதிலும் இருந்து பல வகை தயாரிப்புகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்புகள் துவங்கி கைவினை கலைஞர்கள் தயாரித்த அத்தனை ஆடைகளும், ஆபரணங்களும், அலங்காரப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

The post மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் காட்டன் பேப் கைத்தறி கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: