முதன்மை செயலாளராக மாதேஸ்வரன் நியமனம்

சேலம், ஜன.5: இந்திய நாடார் பேரவையின் முதன்மை செயலாளராக சேலத்தை சேர்ந்த மாதேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியநாடார் பேரவையின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. பேரவையின் மாநிலத்தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ் தலைமை வகித்தார். விஜிபி நிர்வாக துணை தலைவர் தங்கையா, பேரவை நாள்காட்டியை வெளியிட்டார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், தலைமை செயலாளர் ஆழ்வார்தோப்பு ஜெயராஜ் ஆகியோர் நாள்காட்டியை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து இந்திய நாடார் பேரவையின் முதன்மை செயலாளராக சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ஏ.எம்.மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அவைத்தலைவர் ஞானகுமார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.வி.முருகேசன், துணை பொருளாளர் கே.ஆர்.பி.ராஜா, அமைப்பு செயலாளர் அய்யனார் பொன்ராஜ், மாநில தொழில்துறை இயக்குநர் கமல்தாஸ், செய்தி தொடர்பாளர் ஞானகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாதேஸ்வரன் கடந்த 1982-85ம் ஆண்டில் சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அப்போது மாணவர் உரிமைக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். மேலும் படித்தவர்கள் அரசு பணியில் சேர வேண்டி காமராஜர் பெயரில் இலவச வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் படித்து வருகின்றனர்.

The post முதன்மை செயலாளராக மாதேஸ்வரன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: