60 ஆண்டுகளாக பயன்படுத்திய பாதையை அடைத்த தேசிய பஞ்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காளையார்கோவில், ஜன.3: காளையார்கோவில் திருநகர் பகுதி மக்கள் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை பஞ்சாலை நிர்வாகம் மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காளையார்கோவில் திருநகர் பகுதியில் சுமார் 2000 வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்ல இடத்தின் கிழக்குப் பகுதியில் பாதையாக விடப்பட்டது. தற்போது தேசிய பஞ்சாலை நிர்வாகம் அரசுக்கு சொந்தமான காலம் முதல் 58 ஆண்டாக திருநகர் மக்களால் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

குடியிருக்கும் வீடுகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும், கல்லூரி படிக்கும் மாணவ-மாணவியருக்கும் மற்றும் ரேசன் கடைக்கும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வதற்கும் இதுவே பொதுவான சாலையாக இருந்ததாக கூறப்படுகிறது. சாலை செல்லும் இடம் மத்திய பஞ்சாலையான காளீஸ்வரா நிர்வாகத்திற்குட்ட இடத்தில் செல்வதால் அதனை தற்போது பயன்படுத்த அனுமதி இல்லை என்று பாதை அடைக்கபட்டது.

60 ஆண்டாக பயன்படுத்தி வந்த சாலையை பொதுமக்களுக்காக பொது சாலையாக மாற்றிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையாக மாற்றி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 60 ஆண்டுகளாக பயன்படுத்திய பாதையை அடைத்த தேசிய பஞ்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: