வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு

 

ஈரோடு, ஜன.3: தமிழக அரசின் உத்தரவுப்படி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கும் உத்தரவை முழுமையாக அமல்படுத்த பணிகள் மேற்கொள்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஈரோடு மாவட்ட இளைஞரணி கூட்டம், மாவட்ட தலைவர் சண்முகவேலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஆகியவையை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பாவலரேறு அரங்கில் நிகழ்ச்சியாக நடத்தினர்.

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளையும், தமிழில் வைப்பதற்கான உத்தரவை நிறைவேற்றும் வகையில் மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் பணிகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் பொருளாளர் சேகர் நன்றி கூறினர்.

The post வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: