ரூ.2000 நோட்டில் 97% திரும்பியது

மும்பை: ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, ரூ.3.56 லட்சம் கோடிக்கு ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது. கடந்த டிசம்பர் 29ம் தேதி வரை 97.38 சதவீத நோட்டுக்கள் திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இன்னமும் ரூ.9,330 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் சட்டப்படி இன்னமும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.2000 நோட்டில் 97% திரும்பியது appeared first on Dinakaran.

Related Stories: