பிரிஸ்பேன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்டீபன்ஸ்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தகுதி பெற்றார். முதல் சுற்றில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா உடன் நேற்று மோதிய ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

மற்றொரு முதல் சுற்றில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பெர்னார்டா பெராவை (அமெரிக்கா) மிக எளிதாக வீழ்த்தினார். மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்), கமிலா ஜார்ஜி (இத்தாலி), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

The post பிரிஸ்பேன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்டீபன்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: