மலைப்பகுதி ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும்: மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை

 

துறையூர்,டிச.30: மலைப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும் என்று மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின். துறையூர் கோட்ட மாநாடு துறையூரில் நடைபெற்றது. கோட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில துணை தலைவர் ரெங்கராஜன். மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கோட்ட செயலாளர் ரவிசந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். கோட்ட நிர்வாகிகள் சீனிவாசன், நமநாதன் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை திருச்சி வட்ட செயலாளர் செல்வராஜ் முன் மொழிந்தார். திட்ட தலைவர் நடராஜன் வழி மொழிந்தார்.

மலைப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தை மேலும் இரண்டு கம்பெனிகளாக பிரிப்பதை கைவிட வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் வகையில். கொண்டுவர உள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் தலைவராக செல்வம், செயலாளராக ரவிச்சந்திரன், துணைத் தலைவராக சுப்பிரமணியன், துணை செயலாளராக சீனிவாசன், நமநாதன் உள்ளிட்ட 15 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post மலைப்பகுதி ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும்: மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: