சிறுதானிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

 

கோவை, டிச.30: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து வலியுறுத்தி ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் தங்கவேலு ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய இருசக்கர வாகன பேரணி உக்கடம் வழியாக ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறைவடைந்தது. மேலும், கல்லூரியில் ஈட்ரைட் மில்லட் யோகா நிகழ்ச்சி நடந்தது.

இதில், 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று குறைந்த நேரத்தில் அதிக ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,“சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு, சாமை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுதானியங்களில் புரதம், இரும்பு, வைட்டமின்-பி, நார்ச்சத்து, கால்சியம், பைட்டோகெமிக்கல்கள் சத்துக்கள் நிறைந்துள்ளது’’ என்றனர்.

The post சிறுதானிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: