கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை முதல்வர் இன்று திறக்கிறார்: அமைச்சர்கள் தனித்தனியாக ஆய்வு

சென்னை: ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார். ஆசியாவில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான முறையில் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ரூ..394 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 10 மணி அளவில் எளிமையான முறையில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். பின்னர் பேட்டரி காரில் சென்று பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்கிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று காலை 12 மணியளவில் அடுத்தடுத்து வந்து நேரில் ஆய்வு செய்து விட்டு சென்றனர். அப்போது காட்டாங்கொளத்தூர் ஒன்றிய வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ். ஆராமுதன், துணை செயலாளர் பத்மநாபன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன் உட்பட சிஎம்டிஏ நிர்வாக உயரதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையத்தை முதல்வர் இன்று திறக்கிறார்: அமைச்சர்கள் தனித்தனியாக ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: