செம்பனார்கோயில் பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்

செம்பனார்கோயில், டிச.28: செம்பனார்கோயில் பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அஜித்பிரபு குமார் உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தநாதன் தலைமையில் புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியின்போது பத்துக்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பணியில் மாவட்ட தொற்று நோயியல் துறை நிபுணர் மருத்துவ அலுவலர் பிரவீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், பாலமுருகன், சீனிவாச பெருமாள், விஜயகுமார், அருண், சுஜித்குமார், விமலாதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post செம்பனார்கோயில் பகுதிகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: