கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் 77 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

கருங்கல், டிச.29: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி தலைமையாசிரியர் ஞான செல்வம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 77 மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் என் ஏ குமார், ஆசிரியர்கள் ரெகு, ராபர்ட் மைக்கேல் ராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் 77 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: