நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலம் மாற்றியமைப்பு: புதிதாக திருவள்ளூர் வட்டம் உருவாக்கம்

திருவள்ளூர்: சென்னை வடக்கு, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டங்கள் நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, புதிதாக திருவள்ளூர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தின் சென்னை அமலாக்க மண்டலத்தில் தலைமை பொறியாளரின் கீழ், சென்னை வடக்கு மின் பகிர்மான மண்டலத்தில் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை மேற்கு வட்டங்களும், சென்னை தெற்கு மின் பகிர்மான மண்டலத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை தெற்கு 1,2 வட்டங்கள்கள் உள்ளன.

இந்நிலையில் மின் பகிர்மான மண்டலங்களை மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் அளவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை வடக்கு மின் பகிர்மான மண்டலம் சென்னை மண்டலமாக மாற்றப்பட்டு, இந்த மண்டலத்தில் சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு மற்றும் அடையாறு வட்டங்கள் செயல்படும்.

அதேபோல சென்னை தெற்கு மின் பகிர்மான மண்டலம் காஞ்சிபுரம் மண்டலமாக மாற்றப்பட்டு, அதில் சென்னை மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வட்டங்களும் புதிதாக திருவள்ளூர் வட்டமும் உருவாக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் வட்டம் உருவாக்க ரூ.13 லட்சத்து 19 ஆயிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டத்திற்கான வாடகை மற்றும் பிற தளவாடங்கள் அடங்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலம் மாற்றியமைப்பு: புதிதாக திருவள்ளூர் வட்டம் உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: