குப்பம்கண்டிகை ஊராட்சி அரசு பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

திருத்தணி: குப்பம்கண்டிகை ஊராட்சி அரசு பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை ஊராட்சியில் உள்ள அரசுபள்ளியில், குழந்தை நேய உட்கட்டமைப்புத் திட்டத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் திருவாலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா குத்துவிளக்கு ஏற்றிவைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக வகுப்பறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தணிகாசலம், ஒன்றிய பொறியாளர் பாலகிருஷ்ணன், மண்டல அலுவலர் மீனாட்சி, வார்டு உறுப்பினர் ஸ்டாலின், மணிமேகலை, ஊராட்சி செயலர் நாகராஜ், தலைமை ஆசிரியர் கலா, ஒப்பந்ததாரர் சொக்கலிங்கம், ராமமூர்த்தி ஜானகிராமன், ராஜசேகர், சுரேஷ், பார்வதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post குப்பம்கண்டிகை ஊராட்சி அரசு பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: