தனியார் செல்போன் கோபுரத்தில் 24 பேட்டரிகள் திருட்டு

பெரம்பூர்: கொடுங்கையூரில் தனியார் செல்போன் கோபுரத்தில் இருந்து 24 பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செல்போன் டவர் உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் எருக்கஞ்சேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (34) என்பவர் குறிப்பிட்ட அந்த டவர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். இவர் தனியார் செல்போன் கம்பெனியில் டவர் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். ஆய்வு செய்யும்போது அந்த இடத்தில் செல்போன் கோபுரத்திற்க்கு பயன்படுத்தப்படும் 24 பேட்டரிகள் காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தனியார் செல்போன் கோபுரத்தில் 24 பேட்டரிகள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: