மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர்: சின்னத்திரை நடிகர் சங்கம்
மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற மனிதநேயர் விஜயகாந்த் என சின்னத்திரை நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு.
ஒளிமிகுந்த நட்சத்திரமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தமிழ்த் திரையுலகில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. அரசியல் களத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து எண்ணற்ற இதயங்களில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். பொது வாழ்வில் அனைவரின் பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார்.
The post விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு: சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் appeared first on Dinakaran.