கேளம்பாக்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான திருக்குறள் முற்றோதல் விழா நடைபெற்றது. கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் கல்வி மன்றம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவர்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர். இந்த ஆண்டிற்கான திருக்குறள் பயிற்சி முடித்த 7 மாணவிகள் 1,330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கேளம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் திருக்குறள் கல்வி மன்றத்தின் தலைவர் பழனி தலைமை தாங்கினார். கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி எல்லப்பன் மாணவிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கினார். இதைத் தொடர்ந்து மாணவிகள் ரதம் போல் அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் கேளம்பாக்கத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இதில் மாணவிகளுக்கு திருக்குறள் திலகம் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

The post கேளம்பாக்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா appeared first on Dinakaran.

Related Stories: