ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பி.என்.ரோடு பாண்டியன் நகரை அடுத்த அண்ணா நகரில் உள்ள சபரிவனம் ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு கால விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று புஞ்பாஞ்சலி, வேல் வழிபாடு, அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றிரவு சபரிவனம் வந்த ஓ.பன்னீர்செல்வம், ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோயில் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகர விளக்கு, குத்து விளக்கு பூஜைகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இன்று காலை கோவை சூலூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

The post ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: