கூட்டுறவு சங்க உதவியாளர் பணி எழுத்துத் தேர்வில் 685 பேர் பங்கேற்பு: 77 பேர் ஆப்சென்ட்

 

தேனி, டிச.25: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிப்பதற்காக நேற்று நடந்த எழுத்துத் தேர்வினை 77 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்டாகினர். தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம், தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களில்(பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள்நேரடி நியமனம் மூலம் நிரப்ப எழுத்துத் தேர்வு நேற்று தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வுக்காக 39 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டன. இத்தேர்வுக்காக 762 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வினை 685 பேர் எழுதினர். 77 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்டாகினர். தேர்வு நடந்த மையத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆள்சேர்ப்பு தலைவரும், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருமான ஆரோக்யசுகுமார் உடனிருந்தார்.

The post கூட்டுறவு சங்க உதவியாளர் பணி எழுத்துத் தேர்வில் 685 பேர் பங்கேற்பு: 77 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: