எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கே பதவிகள்டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நிர்வாகிகளை நியமனம் செய்ய கூடாது: பாஜ தலைமை மீது முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா அதிருப்தி

பெங்களூரு: எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கே பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்த முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா, டெல்லியில் அமர்ந்து கொண்டு நிர்வாகிகளை நியமனம் செய்ய கூடாது என்று காட்டமாக பதிலளித்துள்ளார். கர்நாடக மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா தலைமையிலான நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜ் , மாளவிகா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு பாஜவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா தலைமையில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமையவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.தற்போது நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்கவர்கள். எனவே புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் தவறு இல்லை என்றாலும் பாஜ நிர்வாகம் இதை மூத்த தலைவர்களிடம் விவாதிக்கவில்லை. பாஜ மேலிடம், மாநில நிர்வாகிகளை நியமிக்கும் முன்பு மூத்த தலைவர்களின் கருத்துகளை கேட்கவேண்டும்.ஆனால், தேசிய தலைவர்கள் அது போல் நடந்து கொள்ளவில்லை. மாவட்ட ,தாலுகா நிர்வாகிகள் நியமனத்தின் போது உள்ளூர் நிர்வாகிகள், மூத்த தலைவர்களிடம் பாஜ மேலிட தலைவர்கள் கருத்துகளை கேட்க வேண்டும்.

மாநில நிர்வாகிகள் நியமனத்திற்கு முன்பு மாவட்ட , தாலுகா அளவில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கவேண்டும். தற்போது நடந்தது போல் டெல்லியில் அமர்ந்து கொண்டு மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யக் கூடாது. இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.பாஜ மாநில நிர்வாகத்தி்ன் தலைமை பொறுப்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருக்கிறார். தற்போது எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பாஜவில் மீண்டும் எடியூரப்பாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

The post எடியூரப்பாவின் ஆதரவாளர்களுக்கே பதவிகள்டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நிர்வாகிகளை நியமனம் செய்ய கூடாது: பாஜ தலைமை மீது முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: