கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர தனியார் தங்கும் விடுதியில் ஜிஞ்சர் பிஸ்கட்ஸ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த கிராமம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வடிவத்தில் கேக் தயார் செய்து வருவது வழக்கம். அதே போல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல் வால்ட் என்னும் பனி படர்ந்து காணப்படும் கிராமத்தின் உள்ள வீடுகள் மாதிரியை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இது இந்த நாட்டில் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த கிராமம் முழுவதும் இரவு நேரத்தில் பனி படர்ந்து மின்னொளியில் ரம்யமாக காட்சி அளிக்கும், இதனை குறிக்கும் வகையில் ஜிஞ்சர் பிஸ்கட், கிரீம் ,பஞ்சு மற்றும் அலங்கார மின் விளக்குகளை கொண்டு தத்ரூபமாக இந்த தனியார் தங்கும் விடுதியில் தயார் படுத்தி உள்ளனர்.

இந்த மாதிரி வடிவதினை தயார் செய்ய 10 நாட்கள் ஆனதாகவும், இதற்கு சுமார் 100 ஜிஞ்சர் பிஸ்கட்ஸ், 60 கிலோ மைதா மற்றும் ஆட்டா, 30 கிலோ சுகர் தேவைப்பட்டதாக இதனை தயார் செய்த சீப் செஃப் தெரிவித்தார்.மேலும் இங்கு சுமார் 25 அடி உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு கிறிஸ்துமஸ் பொம்மைகள், பரிசு பொருட்கள் மற்றும் அலங்கார மின் விளக்குகளை கொண்டு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

ஜிஞ்சர் பிஸ்கட்ஸ்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பனி படர்ந்து காணப்படும் இந்த கிராம வீடுகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் ஆகியவற்றை தங்களது ஹோட்டலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கண்டு ரசித்த செல்வதாக தனியார் தங்கும் விடுதியின் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர தனியார் தங்கும் விடுதியில் ஜிஞ்சர் பிஸ்கட்ஸ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த கிராமம் appeared first on Dinakaran.

Related Stories: