மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்..!!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

அதேபோல், மற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர் பெருமக்கள் அவர்களின் ஒரு மாத ஊதியமான 35 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 91 இலட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய், என மொத்தம் 1 கோடியே 27 இலட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

The post மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்..!! appeared first on Dinakaran.

Related Stories: