தேசிய கணித தின கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச. 23: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்றத்தின் சார்பில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து பேசுகையில், சீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் அத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தவே இத் தினத்தின் நோக்கம் என்றார். முன்னதாக கணித மன்றத்தின் துணைத் தலைவர் ரகு வரவேற்றார்.

மனவளக்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன் பேசுகையில், ராமானுஜன் 3 ஆயிரத்திற்கும் அதிகமான புது கணித தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று மின் தொடர்பு பொறியியல் துறை முதல் இயற்பியல் துறை வரை பல துறை உயர் மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும் 20 ம் நூற்றாண்டில் உலகை வியக்கச் செய்த பெரும் கணித மேதை ராமானுஜன் என்று விவரித்தார்.இதில் பேச்சுப்போட்டி, கவிதை வாசித்தல், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ரம்யா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.

The post தேசிய கணித தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: