ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விளாசல்

சென்னை : பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெள்ள பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,”தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை; உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை; மாநில பேரிடராக அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்.

ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டியது தானே என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: