துரின்: ஏடிபி பைனல்ஸ் எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்று ரெட் மற்றும் கிரீன் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு மோதினர். ரெட் பிரிவில் முதல் இடம் பிடித்த ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், 2வது இடம் பிடித்த ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கிரீன் பிரிவில் முதல் இடம் பிடித்த செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 2வது இடம் பிடித்த நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதியில், 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ்- கேஸ்பர்ரூட் மோதினர். இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்டில் மெட்வெடேவ் வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த 2வது அரையிறுதியில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில் டைப்ரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7(7)-6(4) என ஸ்வெரேவ் கைப்பற்றினார். 2வது செட்டை 6-4 என ஜோகோவிச் தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-3 என ஸ்வெரேவ் கைப்பற்றினார். முடிவில் 7(7)-6(4,4-6,6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் பைனலில் மெட்வெடேவ் -ஸ்வெரேவ் மோதுகின்றனர்….
The post ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்; அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.