தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தகவல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. கொள்ளளவு 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையில் 45.57 அடியில் நீர்வரத்து 1662 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் வெளியேற்றம் இல்லை உபரி நீர் வெளியேற்றம் 2330 கன அடியாக உள்ளது. பெருஞ்சாணி – 75.52 அடி (கொள்ளளவு 77 அடி) நீர் வரத்து – 74.92 கன அடி கால்வாய் வெளியேற்றம் இல்லை. உபரி நீர் வெளியேற்றம் – 2468 கன அடியாக வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட்டத்தில் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கடந்த 17ம் தேதி இரவு முதல் குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையால் 4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 17.12.2023 காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில், பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 39.12 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் 37.96 செ.மீ, தென்காசி மாவட்டத்தில் 20.68 செ.மீ மழையும், கன்னியாகுமரியில் 11.87 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதிகனமழை பதிவான பகுதிகள்:

* தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் 94.6 செ.மீ, திருச்செந்தூர் 68.9, ஸ்ரீ வைகுண்டம் 62.1, கோவில்பட்டி 52.5, சாத்தான்குளம் 47.1 செமீ மழை பதிவாகியுள்ளது.

* திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி 61.5, மாஞ்சோலை 55.2, ஊத்து 49.7, நாலுமுக்கு 46.9, பாளையங்கோட்டை 44.2, அம்பாசமுத்திரம் 43.0, சேரன்மாதேவி 41.2, கண்ணடியன் அணைக்கட்டு 40.6, காக்காச்சி 36.0, நம்பியார் அணை 35.7

* கன்னியாகுமரி மாவட்டத்தில் மைலாடி 30.32 செ.மீ, நாகர்கோவில் 18.10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 6 குழுக்கள், 150 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படையில் 4 குழுக்கள், 100 வீரர்கள் என மொத்தம் 10 குழுக்கள், 250 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 3 குழுக்கள், 75 வீரர்களும் தேசிய பேரிடர் மீட்பு படையில் 4 குழுக்கள் 100 வீரர்கள் என 7 குழுக்களில் 175 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 17 குழுக்களில் 425 வீரர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக வர உள்ளன.இதுமட்டுமின்றி, இந்திய இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் (Common Alert Protocol) மூலம் 62.72 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாததிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 41 முகாம்களில் 502 குடும்பங்களில் 2723 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 முகாம்களில் 173 குடும்பங்களில் 517 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி 26 முகாம்களில் 4056 பேரூம், தென்காசியில் 8 முகாம்களில் 138 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் 5032 கன அடி நீர் வெளியேற்றம், பெருஞ்சாணி அணையில் 5087 கன அடி நீர் வெளியேற்றம், சித்தார் 1 அணையில் 534 கன அடி நீர் வெளியேற்றம், சித்தார் 2 அணையில் நீர் வெளியேற்றப்படவில்லை.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வரப்பெற்ற 13 புகார்கள் உரிய மேல் நடவடிக்கைக்காக தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் முக்கிய தடங்களிலும் அவசர கால உதவிக்காகவும் சம்மந்தப்பட்ட மாவட்ட நிருவாகங்களின் உத்தரவுப்படி இயக்கப்படுகின்றன.

அமைச்சர் பெருமக்களும், கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளார்.

கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நிருவாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: