ஓட்டல், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிரடி சோதனை

 

பாலக்காடு,டிச.16: பாலக்காடு மாவட்டம் காஞ்ஞிரப்புழா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளிப்படி, சிறக்கல்படி, கொற்றியோடு மற்றும் விய்யகுறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களிலும், மளிகைக் கடைகளிலும் சுகாதாரத்துறை மற்றும் கிராமப்பஞ்சாயத்து அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுப்பட்டனர். இவ்விடங்களிலுள்ள ஓட்டல்களில் சமையலறைகள் சுத்தமின்மை, விலை விபரப்பட்டியில் வெளியீடு செய்யாமல் இருந்தமைக்கு ஓட்டல் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், சுற்றுவட்டார பகுதியிலுள்ள மளிகை கடைகளில் அரசு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவரும், கேரி பேக்குகள் ஆகியவை விநியோகம் செய்வது குறித்து சட்டப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிளாஸ்டிக் கவருகள், பிளாஸ்டிக் கேரி பேக்கினை நுகர்வோருக்கு வழங்கக்கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். வரும் நாட்களிலும் சோதனைகள் தொடரப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்க்காடு தாலுகா சுற்றுவட்டார பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் கடையில் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்ஞிரப்புழா கிராமப்பஞ்சாயத்து பள்ளிப்படி, சிறக்கல்ப்படி, கொற்றியோடு, விய்யக்குறிச்சி ஆகிய இடங்களில் குடும்ப சுகாதார மைய ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பஞ்சாயத்து எழுத்தர் கார்த்திகேயன் ஆகியோர் இந்த சோதனையில் பங்கேற்றிருந்தனர்.

The post ஓட்டல், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: