திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரியாணி வழங்கினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் திருமழிசை பேரூராட்சியில் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரூர் திமுக செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில ஆதிதிராவிடர் நலப் பிரிவு செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான தேசிங்கு, பேரூராட்சி தலைவர் வடிவேல், துணைத் தலைவர் மகாதேவன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், பேரூர் நிர்வாகிகள் செல்வம், வழக்கறிஞர் நாகதாஸ், வேந்தன், அருள், இளங்கோவன், சுரேந்தர், எழிலரசன், பன்னீர்செல்வம், கங்காதரன், நாகராஜ், மோகன்ராஜ், வேலு, பேரூராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி வேலு, சங்கர், ஜீவா சதீஷ், தென்னரசு, கிருஷ்ணன், கோகுல், அன்பு, தரணி பிரசாத், ஆனந்தராஜ், கோபு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருமழிசை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.