கோவை நகைக்கடை கொள்ளையனை பிடிப்பது மிகுந்த சவாலாக இருந்தது: காவல் துணை ஆணையர் சந்தீஷ் விளக்கம்

கோவை: கோவை நகைக்கடை கொள்ளையனை பிடிப்பது மிகுந்த சவாலாக இருந்தது என்று காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்துள்ளார். கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் விஜய் கைது தொடர்பாக துணை ஆணையர் சந்தீஷ் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த தருமபுரியை சேர்ந்த விஜய் நேற்று கைது செய்யப்பட்டார். நவ.28-ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 4.6 கிலோ நகை கொள்ளை போனது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் வைர நகைகள் மட்டும் மீட்கப்படவில்லை. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையன் விஜயை பிடித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

The post கோவை நகைக்கடை கொள்ளையனை பிடிப்பது மிகுந்த சவாலாக இருந்தது: காவல் துணை ஆணையர் சந்தீஷ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: