பிஎம்எஸ் அரசு மகளிர் பள்ளியில் நவீன கழிப்பறை கட்டும் பணிகள்: காஞ்சிபுரம் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுத்தில் உள்ள பிஎம்எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை கட்டும் பணிகளை எழிலரசன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மாணவிகளுக்கு கூடுதல் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தநிலையில், பள்ளி வளாகத்திற்குள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.39.50 லட்சம் மதிப்பில் மாணவிகள் பயன்பாட்டிற்காக அதிநவீன கழிப்பறை கட்டும் பணியை, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கடந்த மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த கழிப்பறையில் டைல்ஸ் கல்லுடன் 10க்கும் மேற்பட்ட வெஸ்டர்ன் டாய்லெட், கை கழுவும் தானே இயங்கிய குழாய் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இக்கழிப்றையில் கூடுதலாக அமைக்கப்படும் பணிகளை குறித்து ஆலோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணி குறித்து முறையாக இருக்கிறதா, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, பள்ளி தூய்மையாக இருக்கிறதா, மாணவ – மாணவிகள் பயமின்றி வகுப்பறைக்கு அமர்ந்து படிக்கும் வகையில் தூய்மையாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மாநகராட்சி பொறியாளர் கணேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.சந்துரு, கமலக்கண்ணன், பகுதி செயலாளர் திலகர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post பிஎம்எஸ் அரசு மகளிர் பள்ளியில் நவீன கழிப்பறை கட்டும் பணிகள்: காஞ்சிபுரம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: