போச்சம்பள்ளி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட இணைத்தலைவர் அரவிந்தகுமார், துணை தலைவர் பழனிவேல், மாவட்ட அமைப்பாளர் திம்மராயன், தருமன், சக்திவேல், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்தூர் பஸ் நிலையத்தில் எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும். சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post மின் விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.
