தர்மபுரி, டிச.11: தர்மபுரி இலக்கியம்பட்டி கிராமத்தில் இருந்து 900 பேர் திருப்பதிக்கு பஸ், வேன், கார்களில் சென்றனர். இதனால், காலியான கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி இலக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை விரதம் இருந்து திருப்பதிக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதுபோன்று நேற்று காலை கிராம மக்கள் ஊர் விளையாடி சாமி அழைப்பு நடந்தது. பின்னர், இலக்கியம்பட்டியைச் சேர்ந்த இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அண்ணா நகர், அழகாபுரி, ராஜாஜி நகர், கலெக்ட்ரேட் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் 900 பேர் நேற்றிரவு திருப்பதிக்கு புறப்பட்டனர்.
இலக்கியம்பட்டி பெருமாள் கோயிலில் இருந்து 7 பேருந்து, வேன், கார்களில் இலக்கியம்பட்டி கிராம மக்கள் திருப்பதி சென்றனர். இதனால், ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. பெரும்பாலன வீடுகளில் முதியோர்கள், கோயிலுக்கு செல்லமுடியாத பெண்கள், சிறுவர்கள் மட்டுமே உள்ளனர். இலக்கியம்பட்டி மக்கள் திருப்பதி சென்றுள்ளதால் தர்மபுரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஒரே நேரத்தில் 900 பேர் திருப்பதி சென்றனர் appeared first on Dinakaran.
