வெள்ள பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு ரூ.5000 கோடி விடுவிக்க வேண்டும்: மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக ரூ.5000 கோடி உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் மதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக ரூ.5000 கோடி உடனே விடுவிக்க வேண்டும். பருத்தி, நூல் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கங்கள், 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவது, தரக்கட்டுப்பாட்டு உத்தரவு சிக்கல்களைக் களைவது போன்றவற்றில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post வெள்ள பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு ரூ.5000 கோடி விடுவிக்க வேண்டும்: மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: