மிக்ஜாம் புயலால் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளது: ஆய்வுக்குப்பின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: மிக்ஜாம் புயலால் கனமழை வெளுத்து ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு நிவாரணப் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். வடிகால் பணிகள் முறையாக நடந்ததால் பல இடங்களில் நீர் வேகமாக வடிந்தது. வீடுகளில் மழைநீர் புகுந்து தேசம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளது. பள்ளிக்கரணையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த பின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம் போக்குவரத்து சீரடைந்துள்ளது.

இரண்டு குழுக்களாக பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு ஆய்வு செய்ய உள்ளது. புயல் மழையால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி சவாலாக உள்ளது. நாளைக்குள் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் என்று தலைமை செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.

 

The post மிக்ஜாம் புயலால் பாதித்த பகுதிகளில் ஒன்றிய குழு 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளது: ஆய்வுக்குப்பின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: