சுற்றுலா பகுதியான செட்டிநாடு ஸ்டேசனில் ரயில்கள் நிற்க வேண்டும் பேரூராட்சி சேர்மன் மனு

 

காரைக்குடி, டிச.10: காரைக்குடி அருகே செட்டிநாடு ரயில்வே ஸ்டேசனில் சென்னை மற்றும் உள்ளூர் ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கானாடுகாத்தான் பேரூராட்சி சேர்மன் ராதிகா கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதி உலக புகழ் பெற்ற சுற்றுலாதலமாக உள்ளது. இங்குள்ள பாரம்பரியம் மிக்க நூற்றாண்டுகளை கடந்த பங்களாக்களை பார்வையிட பல்வேறு நாடுகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள செட்டிநாடு ரயில் நிலையத்தில் நீண்ட காலமாக ரயில்கள் நின்று சென்றன.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை சென்னை செல்லும் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்கள் நின்று சென்றன. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது வரை சென்னை மற்றும் உள்ளூர் ரயில்கள் ரயில்கள் நின்று செல்வது இல்லை. இதனால் சுற்றுப்புற மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சென்னை செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் உள்ளூர் பயணிகள் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சுற்றுலா பகுதியான செட்டிநாடு ஸ்டேசனில் ரயில்கள் நிற்க வேண்டும் பேரூராட்சி சேர்மன் மனு appeared first on Dinakaran.

Related Stories: