மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3, 4 தேதிகளில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ. 561.29கோடி நிதி வழங்கியது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும். நிவாரணப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 

The post மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: