மோசமான காலநிலையால் தேங்காய் உலர் பணிகள் பாதிப்பு

 

காங்கயம், டிச.9: காங்கயம் பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தேங்காய் உலர் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கயம் பகுதிகளில் ஏராளமான தேங்காய் உலர் களங்கள் உள்ளன. தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும்.

இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காங்கயத்தில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் நேரம் முழுவதும் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

The post மோசமான காலநிலையால் தேங்காய் உலர் பணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: