மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு


சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கனமழையினால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள். பாதிப்புள்ளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனைப் பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (8.12.2023) வழங்கினார்கள்.

சென்னையில், வேளச்சேரி, அம்பேத்கர் நகர். வார்டு எண்.175, மடிப்பாக்கம், பாலாஜி நகர். பள்ளிக்கரனை. சாய்பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 5500 அரிசி மூட்டைகள் (5கிலோ பேக்). 11600 பால்பவுடர் பாக்கெட்டுகள், 14000 வாட்டர் பாட்டில்கள், 70000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 12000 பிரட் பாக்கெட்டுகள், 17000 சுவீட் பன்னு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

மேலும், பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, அதனை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றி, மழைநீர் விரைவாக வடிய, நடவடிக்கை மேற்கொண்டார்கள். இந்த நிகழ்வின்போது. பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி பொதுப்பணித்துறை மற்றும் தலைமைப் பொறியாளர்களும், அலுவலர்களும் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உடனிருந்து, நிவாரணப் பொருட்களை வழங்க பேருதவி புரிந்தனர்

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: