பெரம்பலூர், டிச.8: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ.32 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ் சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கன மழை பெய்தது. அதற்காக தமிழ்நாடு அரசு போர்க் கால அடிப்படையில் பல் வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங் கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிவாரண பணிகளை துரிதப்படுத்த வும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
அதனடிப்படையில் மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் தனியார் அமைப்புகள், தனியார் கல்லூரிகள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள் என பல்வேறு அமைப்பினரும் அரிசி, குடிநீர், மெழுகு வர்த்தி, போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன்படி சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னை மாவட்டம் புழுதி வாக்கம் பகுதிக்கு கடந்த 6ம்தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2வது நாளாக நேற்று (7ம் தேதி) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத் தின் சார்பில் ரூ8 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டி முத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் ரூ1 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் பல்வேறு தன்னார் வலர்கள், தனியார் அமைப் புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுமார் ரூ13 லட்சம் மதிப் பீட்டிலும் நிவாரண பொருட் கள் 3 வண்டிகளில் சென் னை மாவட்டம் திருவெற்றி யூர் (பகுதி 14)க்கு அனுப்பப் பட்டது. கடந்த இரண்டு நாட் களாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பல்வேறு நிவாரண பொரு ட்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் தொண் டுள்ளம் படைத்தோர் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமைக்கப் பட்டு ள்ள நிவாரணப் பொருட் கள் சேகரிப்பு மையத்தில் பொருட்களைவழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
The post நாளை நடக்கிறது; புயலால் பாதித்த மக்களுக்கு வழங்க பெரம்பலூரிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சென்னை சென்றன appeared first on Dinakaran.
