புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை, வடசென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் புரட்டியெடுத்த புயலால் புழல் ஏரி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏரி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியதால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன சுற்றுசுவர் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியானது, இதனை தொடர்ந்து புழல் ஏரியின் உறுதித் தன்மை குறித்து அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மூர்த்தி இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செயற்பொறியாளர் அமைச்சர்களிடம் கூறியதாவது,

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: செயற்பொறியாளர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக இருந்தது. மழை பெய்தபோது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டன. புழல் ஏரியின் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புழல் ஏரிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் துரைமுருகன்

புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை, வடசென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

The post புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை, வடசென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: