பிணையில் இருந்த பெண்களுக்கு பாலியல் கொடுமை; துப்பாக்கியால் சுட்டு உடல் உறுப்புகளை வெட்டியதாக இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு!!

ஜெருசலேம் : ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திய போதும், பிணை கைதிகளை அடைத்து வைத்து இருந்த போதும் தங்கள் நாட்டு பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இஸ்ரேல் அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அக் 7ம் தேதி இஸ்ரேல் மீது 5000 ஏவுகணைகளை வீசிய ஹமாஸ் இயக்கத்தினர், 1200 பேரை கொன்றதோடு 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய நகரங்களில் 300 பெண்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்ற 240 பேரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். பெண் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் எங்கே சென்றன என்று கேள்வி எழுப்பி உள்ள நெதன்யாகு, உலக நாடுகள், அமைப்புகள் இஸ்ரேலிய பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனிடையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களின் வாக்குமூலத்தை இஸ்ரேலிய போலீஸார் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். துப்பாக்கியை உடலில் பல்வேறு பாகங்களின் வைத்து பெண்கள் பலரை ஹமாஸ் அமைப்பினர் துண்டு துண்டாக வெட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது.

The post பிணையில் இருந்த பெண்களுக்கு பாலியல் கொடுமை; துப்பாக்கியால் சுட்டு உடல் உறுப்புகளை வெட்டியதாக இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: