தற்போது கூடுதலாக 5 குழுக்கள் வந்துள்ளது. இதனிடையே, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 25 பேர் கொண்ட 19 NDRF குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் முழுமையான இயல்பு நிலையில் விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சூழலில், சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 004-23452360, 004-23452361, 004-23452377 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் அழுகிய 4 மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 300 நடமாடும் மருத்துவ சிறப்பு முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் மீட்பு பணியை மேற்கொள்ள விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை: மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.