சென்னையில் 6வது முறையாக பெருமழை வெள்ளம்.. இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழைப் பொழிவு: வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னை: இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழை பெய்துள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 48 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 469 மிமீ மழை (230 மிமீ மற்றும் 239 மிமீ) பெய்துள்ளது. ஆவடியில் அதிகபட்சமாக 48 மணி நேரத்தில் மிக மோசமாக 564 மிமீ மழையும் (276 மிமீ மற்றும் 278 மிமீ), பூந்தமல்லியில் 483 மிமீ மழையும் (141 மற்றும் 342) பொழிந்துள்ளது.

சென்னை மாநகரில் ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் 40 முதல் 50 செ.மீ. மழை கொட்டியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ததே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்குக்கு காரணம். தாம்பரத்தில் 48 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பெய்ததால் அடையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூண்டி ஏரியில் 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது 2006 ஓக்னி புயல், 2008 நிஷா புயல், 2000 நிவர் புயல் ஆகியவற்றை காட்டிலும் அதிக மழையை வாரிக் கொடுத்துள்ளது. சென்னை மாநகரம் 6வது முறையாக மிகப்பெரிய மழைப்பொழிவை சந்தித்துள்ளது.
ஏற்கனவே 1976, 1985, 1996, 2005, 2015-ம் ஆண்டுகளில் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இந்த வரிசையில் 2023ஆம் ஆண்டும் சேர்ந்து கொண்டது. ஏனெனில் இந்த ஆண்டுகளில் சென்னையின் மழைப்பொழிவு 2000 மில்லிமீட்டரை தாண்டி விட்டது. என்று தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் 6வது முறையாக பெருமழை வெள்ளம்.. இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழைப் பொழிவு: வெதர்மேன் பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Related Stories: