சென்னையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்!

சென்னை: சென்னையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு அரசால் பொது விடுமுறை விடப்பட்டது. அத்துடன் கனமழையின் காரணமாக பிரதான சாலைகளில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தொடர் கனமழையால் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புயலின் தாக்கம் குறைய தொடங்கி மழை நின்ற நிலையில் தற்போது வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்காகவும் பேருந்துகள் அனுப்பப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

The post சென்னையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: